full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தளபதியுடன் ‘மக்கள் செல்வன் -மகிழ்ச்சியில் ரசிகர்கள்

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கான தொடக்க பூஜை இன்று நடைபெற்றது .

நடிகர் விஜயின் 64 வது படமான இதற்கு ‘விஜய்-64 ‘என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது .

மேலும் இந்த படத்தின் தொடக்க பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பேனரில் தளபதி விஜய் என்ற பெயருக்கு அருகே , விஜய் சேதுபதியை அவரது ரசிகர்கள் செல்லமாக குறிப்பிடுகின்ற ‘ மக்கள் செல்வன்’ எனும் பட்டத்தைக் குறிப்பிட்டு ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ என்று எழுதப்பட்டிருந்தது.

இதன் மூலம் மூத்த நடிகரான விஜய் , விஜய்சேதுபதி என்ற வளரும் நடிகரையும் , தனது படத்தில் அவரது அடைமொழியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருப்பதாகவும் , இச்செயல் நடிகர் விஜய்யின் பெருந்தன்மையைக் காட்டுவதாகவும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .