full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தளபதிக்கு சிறப்பு அனுமதியா?

QUBE மற்றும் UFO கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒட்டுமொத்த திரையுலகமும் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகிறது.

போஸ்ட் புரொடக்‌ஷன் முதல் போஸ்டர் ஒட்டுவது வரை ஒரு வேலை கூட நடக்காது என அறிவித்து 15 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாகவும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

பல பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இன்னும் சுமுகமான முடிவு எட்டப்படாததால், இந்த மாத இறுதி வரைக்கும் கூட வேலை நிறுத்தம் தொடரலாம் என வேதனை தெரிவிக்கின்றனர் திரை உலகத்தினர். இதனால் “தளபதி62, “விஸ்வாசம்”, “சூர்யா36” உட்பட்ட 40 திரைப்படங்களின் படப்பிடிப்பு ரத்தாகி இருக்கிறது. பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வராமல் தள்ளிப் போயிருக்கின்றன.

இதனால் ஏறக்குறைய 500 கோடி ரூபாய் வரை முடங்கியிருப்பதாக கவலை கொண்டிருக்கிறது தயாரிப்பாளர்களின் தரப்பு.

இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “தளபதி 62” படத்தின் படப்பிடிப்பு சிறப்பு அனுமதி பெற்று நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.