இந்தியா முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஜிஎஸ்டி குறித்து நடிகரும், இயக்குநருமான தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இதனால் நமக்கு என்ன கிடைக்கும் என நினைத்தால் இதுதான் கிடைக்கும்!
விளை நிலங்களை சாகடித்தோம்! நீர் நிலைகள் அழிவதை பார்த்துக்கொண்டே இருந்தோம்! உழவர்கள் கதறினார்கள்! எதைப்பற்றியும் நாம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் அழிவின் தொடக்கம் தான் நம்மை நோக்கி இப்போது திரும்பியிருக்கிறது. எதற்கும் வாய் திறக்காதவர்களின் வாய்களெல்லாம் இப்போது GST, GST என கத்துகிறது, கதறுகிறது!
அன்று உழவனுக்கு நீதி கேட்டு அவனை ஆதரித்து நாமெல்லாம் வீதியில் இறங்கி இருந்தால் தேர்ந்தெடுத்த மக்களுக்கு பயந்து ஆட்சி நடத்தியிருப்பார்கள். நம் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் நாம் கேட்டது கிடைத்திருக்கும். இனி அவர்கள் யாருக்காக பயப்பட வேண்டும்? வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து வாக்களிக்காத வரை நாம் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.