விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த 18-ந்தேதி வெளியானது. அந்த திரைப்படத்தில் மத்திய அரசு முன்பு மேற்கொண்ட பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகியவற்றை குறித்த விமர்சனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
அந்த விமர்சனங்கள் தற்போது அரசியல் ரீதியாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இயக்குனர் தங்கர்பச்சானும் இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 2 விதமான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்.
அவற்றில், “பணத்தை மட்டுமே குறி வைத்து நடிகர் முகத்தை காட்டும் சினிமா பின்னால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் இந்த மக்கள் ஓடிக்கொண்டு இருப்பார்கள்?”. என்றும்,
“நம் நாட்டில் மட்டுமே மசாலா சினிமா புகழை வைத்து அரசியலுக்குள் நுழைகின்றனர். உலகத்தில் எந்த மக்களும் இப்படிப்பட்ட கேவலத்தை அனுமதிப்பதில்லை”. என்றும் குறிப்பிட்டுள்ளார்.