full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நன்றி தெரிவித்து கடிதம் எழுதிய நாயகன்

இயக்குநர் ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. தரமணி படத்தின் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, கதாநாயகன் வசந்த் ரவி நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “அன்புடையீர் வணக்கம், நான் கதையின் நாயகனாக அறிமுகமான “தரமணி” படத்திற்கு தாங்கள் அளித்த அமோக ஆதரவிற்கு நன்றி.

தரமணி படத்தில் எனது நடிப்பை பாராட்டி முதல் படத்திலேயே ஒரு நல்ல நடிகனாக வலம் வரும் அனைத்து தகுதியும் உள்ளது என நீங்கள் கூறிய வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் மேலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலையும் தூண்டுகிறது. பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களின் இத்தகைய ஆதரவு எனது கலைப்பயணத்திற்கு ஊன்று கோளாக அமையும் என்பதை உளமாற நம்புகிறேன்.

என் சினிமா அறிமுகத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்த இயக்குனர் ராம், தயாரிப்பாளர் ஜே.சதிஷ் குமார், உடன் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.