படத்தின் வசூலை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு

News
0
(0)

விவசாயத்தை காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும்‘தப்பாட்டம்’ படக்குழுவினரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

‘நீரின்றி  அமையாது உலகு.. உழவனே.. நீ இன்றியும் அமையாது  உலகு..
 தாய்ப்பால் துளி மட்டும் என்னை வளர்க்கவில்லை..உழவனே உன் வியர்வை துளியின்றி மனித இனத்திற்கு உணவில்லை..!
 இன்று நிர்வாணமாக தெருவில் நிற்கிறாய்.. நீ மனம் துடித்து தமிழனாய் உலக அரங்கில் அவமானத்துடன் செய்வதறியாது  தவிக்கிறேன்..  நான்..!
 உழவனே.. இதுவரை உண்பதை மட்டுமே சிந்தித்தேன் உன்னை…  சிந்திக்கவில்லை மன்னித்து விடு இனி உயிர் இருக்கும் வரை
உன் நினைவிருக்கும்..!
 

மே 15ம் தேதி வெளியாகும் மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தப்பாட்டம்” திரைப்படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில்குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.