எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் அந்த மொழிக்கு இருக்கிறது : வைரமுத்து

News

64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார். மோகன்லால், ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின், தயாரிப்பாளர் தனஞ்செயன், இந்தியில் சோனம் கபூர், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றது குறித்து பேசிய வைரமுத்து, “

7ஆவது முறையாக தேசிய விருது பெற்றது பெருமைக்குரியதுதான். பெருமையும் சாதனையும் மொழிக்கான முதல் உரிமையே தவிர பாடலாசிரியருக்குரியது அல்ல.” என்றும், “எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும் ஆற்றல் தமிழுக்கு இருக்கிறது.” என்றும் தெரிவித்தார்.