full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மீண்டும் களம் இறங்க காத்திருக்கும் ‘தல’, ‘தளபதி’யின் நாயகி – நடிகை ஸ்வாதி

தேவா’வில் விஜய்யுடனும், ‘வான்மதி’யில் அஜீத்துடன் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இரண்டு படங்களும் வெற்றியடைந்ததை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு படிப்புதான் முக்கியம் என்று ஹைதராபாத்திற்கு பறந்தார் ஸ்வாதி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமீரின் இயக்கத்தில் வெளியான ‘யோகி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது, தெலுங்கில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். சினிமாவில் மட்டுமல்லாது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவும் ஆர்வமாக உள்ளார்.

நான் நடித்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவீர்கள்? என்று ஆவலுடன் கேட்கிறார்கள். ‘மேக்கப்’ இல்லாமல் சென்றாலும் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இத்தனை வருடம் கழித்தும் இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று பாராட்டுகிறார்கள். அப்படி ஒரு பயணத்தின் போது ஒரு தம்பதியரை சந்திக்க நேர்ந்தது. அந்த சந்திப்பிலிருந்து தான் எனக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். என் குடும்பத்தாரும் எனக்கு முழு ஆதரவோடு இருக்கிறார்கள்.

நான் அவ்வப்பொழுது படங்களைப் பார்த்து வருகிறேன். முன்பைவிட இப்பொழுதுள்ள சினிமா தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ‘பாகுபலி’ போன்ற படங்கள் உலகளவில் பேசப்பட்டது. பல தொலைக்காட்சி சேனல்கள் வந்தாலும் சினிமா என்றும் அழியாமல் நிரந்தரமாக இருக்கும்.

சினிமாவை மிகவும் நேசிக்கிறேன். என் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க நல் வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு நடிகை ஸ்வாதி கூறினார்.