full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

பெண்கள் இருந்த அறைக்குள் நுழைந்து மாட்டிக்கொண்ட காமெடி நடிகர்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் எல்லாம் தற்போது ஹீரோவாக களமிறங்கிவிட்டனர். இதனால், இரண்டாம் கட்ட காமெடி நடிகர்கள் முன்னணி காமெடியர்களாக தற்போது வலம் வரத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில் இரண்டு, மூன்றாம் கட்ட காமெடியனாக இருந்த இரண்டெழுத்து காமெடி நடிகர் தற்போது தன் வசம் நிறைய படங்களை தன்வசம் வைத்துக் கொண்டு கல்லா கட்டி வருகிறார்.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது இவருக்கென்று ஓட்டலில் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை அவருக்கு சௌகரியமாக இல்லையாம். இதனால், தன்னுடைய உதவியாளரிடம் அந்த அறையை மாற்றுமாறு சொல்லிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாராம்.

படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் ஓட்டலுக்கு திரும்பியவர், எப்போதும்போல் தனது அறைக் கதவை திறந்தாராம். உள்ளே பார்த்தவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்ததாம். நிறைய பெண்கள் அவருடைய அறையில் படுத்துக் கிடந்தார்களாம். என்னடா வம்பா போச்சு என்று அதிர்ந்தவர் உடனடியாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாராம்.

அதன்பிறகுதான், அவரது மூளையில் தனது உதவியாளரிடம் அறையை மாற்றச் சொன்னது ஞாபகத்துக்கு வந்ததாம். அறையை மாற்றிய விபரத்தை தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று உதவியாளரிடம் அந்த காமெடி நடிகர் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், அந்த அறையில் இருந்த பெண்கள், ஆண்கள் என எல்லோரும் அந்த காமெடி நடிகரை நோக்கி படையெடுத்து வர ஆரம்பித்தனராம்.

இதையடுத்து, அந்த காமெடி நடிகர் நடந்த விவரங்களை அவர்களிடம் சொல்லி மன்னிப்பு கேட்க, அதன்பிறகே அந்த பிரச்சினை முடிவுக்கு வந்ததாம்.