அரியானாவை சேர்ந்த கல்லூரி மாணவி நிகிதா சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலையாளி, மிர்ஸாபுர் தொடரை பார்த்த பிறகுதான் நிகிதாவை கொலை செய்யும் எண்ணம் வந்தது என்று அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நடிகை கங்கனா ரணாவத் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “தன்னுடன் வாழும்படி வற்புறுத்தியவன் ஆசைக்கு இணங்காமல் உயிரை விட முன் வந்த நிகிதாவின் துணிச்சல் ராணி லட்சுமிபாய், பத்மாவதி ஆகியோருக்கு குறைந்தது அல்ல. திரைப்படங்களில் குற்றவாளிகளை கதாநாயகர்களாக காட்டினால் இதுபோன்ற சம்பவங்கள்தான் நடக்கும். கதாநாயகர்கள் வில்லத்தனமாக நடிக்கும்போது அவர்களின் கதாபாத்திரங்களை வில்லன்களாக சித்தரிப்பது இல்லை. மாறாக வில்லன்களாக நடித்தாலும் அவர்களை கதாநாயகர்கள் போலவே காட்டுகிறார்கள். இதனாலேயே இப்படி சம்பவங்கள் நடக்கின்றன. இதற்காக இந்தி பட உலகம் வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.