full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நிவாரண நிதியாக ரூபாய் 1 கோடி அளித்தார் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” தலைவர் திரு லெஜண்ட் சரவணன்

தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த திரு லெஜண்ட் சரவணன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நம் தமிழக மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக இன்று சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் “மாண்புமிகு” தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை சந்தித்து, எங்களின் “தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்” சார்பாக ரூபாய் 1 கோடி, கஜா புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளோம்.

மேலும் இத்தருணத்தில் நம் தமிழக மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். புயலால் துயரத்தில் ஆழ்ந்துள்ள நம் சகோதர, சகோதரிகளுக்கு நாம் அனைவரும் நம்மால் இயன்ற சிறிய உதவியோ, பெரிய உதவியோ செய்து இத்துயரத்தில் இருந்து அவர்கள் விரைவில் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப அனைவரும் ஆதரவு தந்து தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நம் விவசாய நண்பர்கள் கஜா புயலின் தாக்குதலால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். கஷ்டம் நஷ்டம் அனைவரின் வாழ்விலும் வரும் போகும், எதுவும் நிரந்தரம் இல்லை. மனவுறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டால் இவ்வுலகில் வெற்றி பெற்று மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். இதற்கு நம் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு விவசாயிகளுக்கும் பக்கபலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

தலைவர்

Legend சரவணன்