பஹாமாஸ் நாட்டில் திரையிட இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே படம்!

Speical

’தாய்நிலம்’ என்ற திரைப்படம் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழ் திரைப்பட உலகிற்கு காலெடுத்து வைதிருப்பவர் டாக்டர் அமர் ராமச்சந்திரன்…

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் நடித்த தாய்நிலம் நிறைவுபெற்று ரிலீசிற்கு தயாராக உள்ளது. இந் நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் ’பக்ஷிகளுக்கு பறயான் உளது’ (பறவைகள் சொல்ல நினைப்பது ) கதாநாயகனாக நடித்துள்ளார்.

பஹாமாஸ் நாட்டின் உலக பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது….இந்த விழாவிற்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு திரைப்படமும் இதுவே…

சுதா ராதிகா என்ற பெண் இயக்குனரால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சந்தர்ப்பம் சூழலால் சில தவறுகளுக்கும் புதைக்கப்பட்ட மனநிலை கொண்ட ஒரு பறவைகள் ஆராய்ச்சியாளராக தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன் என்கிறார்கள் விழாத் தேர்வுக்குழுவினர்…

செல்லும் விழாக்களில் எல்லாம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது ’பக்ஷிகளுக்கு பறயான் உளது.’ அநேக திரைப்பட விழாக்களில் இதுவரை திரையிடப்பட்ட இப்படம் பஹாமாஸில் அதிலும் பெண்கள் திரைப்பட விழாவில் பங்கேற்பதால் ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மிகப் பெருமையாக உள்ளது எனக் குறிப்பிட்டார் டாக்டர் அமர் ராமச்சந்திரன்.

இந்த திரைப்படத்தில் அமர் ராமச்சந்திரன், மீனாக்ஷி, நீலாஞ்சனா, லைலா, நமிதா ஆகியோர் நடித்திருக்கின்றனர்…டாக்டர் அமர் இராமச்சந்திரன் ஏற்கெனவே நடித்து தயாரித்திருக்கும் தமிழ் திரைப்படம் தாய்நிலம் இந்த வருடம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கேற்க தயாராகி வருகிறது. ஒரே வருடம் இரண்டு திரைப்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கெடுப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் டாக்டர் அமர் இராமச்சந்திரன்…