அனிருத்துடன் இணைந்து பணியாற்றியது குறித்து இசையமைப்பாளர் விவேக் கூறியதாவது…
அனிருத் எப்போதும் எங்களுக்கு நண்பருக்கு மேலானவர். அவர் எங்களின் சகோதரர் போன்றவர். அவரை எங்கள் இசையில் பாட வைப்பது எங்களது நெடுநாளைய கனவு. ஜிகிடி கில்லாடியில் அது நிறைவேறியிருப்பது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. “ஜிகிடி கில்லாடி” பாடல் எங்கள் மனதுக்கு நெருக்கமான ஒன்று. தனுஷ் அனிருத் கூட்டணி என்பது எப்போதும் வெற்றி கூட்டணி. இப்பாடலின் அசுர வெற்றி அதனை மீண்டும் நிரூபித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்றார்.
“பட்டாஸ்” படத்தில் பணிபுரிந்தது குறித்து விவேக் கூறியாதவது…
நாங்கள் இருவரும் தனுஷ் சாரின் “பட்டாஸ்” படத்தில் கடந்த 8 முதல் 9 மாதங்களாக பணிபுரிந்து வருகிறோம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியும் பெரும் மகிழ்சியானதாகவே இருந்திருக்கிறது. பாடல்களை உருவாக்க ஆரம்பித்த தருணம் முதல் இப்போது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் இந்த தருணம் வரை எங்களுக்கு மகிழ்ச்சியின் பயணமாகவே அமைந்துள்ளது. ஒரு வகையில் இந்த பணியில் எங்கள் முன் மிகப்பெரிய பொறுப்பு இருந்தது. நானும் மெர்வினும் ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம் நாங்கள் செய்யும் பாடல்களில் புதுமையையும், நேர்த்தியையும், பாடலுக்குரிய நியாயத்தையும் உண்மையாக தர உழைத்தோம். எந்த இடத்திலும் இது எங்களது முந்தைய பாடல்களை பிரதிபலித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். “பட்டாஸ்” எங்கள் சினிமா பயணத்தில் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இப்போது மூன்று பாடல்களும் மிகப்பெரிய வெற்றிபெற்றிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மற்ற பாடல்களும் இதே போன்று இனிமையானதாக, புத்துணர்வு தரும் பாடல்களாக இருக்கும். என்றார்.