full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திரையரங்குகள் வழக்கம் போல் இயங்கும்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு R.பன்னீர்செல்வம், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. அபிராமி ராமநாதன், கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவருமான திரு. திருப்பூர் சுப்புரமணியம், திருச்சி தஞ்சாவூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு ஜோசப் பிரான்ஸிஸ், திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் திரு பிரதாப், வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. G.சீனிவாசன் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் திரு.R.செல்வின்ராஜ் ஆகியோரின் கையொப்பத்துடன் இன்று வெளியிட்டுள்ள இந்த கூட்டறிக்கையில் வருகின்ற 30.5.2017 முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்படக் காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் – அருள்பதி (தலைவர்), ஜெய்குமார் (செயலாளர்), கோயம்புத்தூர் – ராஜமன்னார் (தலைவர்), சிவராமன் (செயலாளர்), மதுரை – R.செல்வின்ராஜ் (தலைவர்), ஷாகுல் அமீத் (செயலாளர்), திருநெல்வேலி – மணிகண்டன் (செயலாளர்), திருச்சி – ரவிச்சந்திரன் (செயலாளர்), வேலூர் – பாலாஜி (தலைவர்), சேலம் – முருகேசன் (தலைவர்) பாண்டிச்சேரி – லோகு (தலைவர்), வட ஆற்காடு – பாலாஜி (தலைவர்), டில்லிபாபு (செயலாளர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.