full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

வெற்றி மகிழ்ச்சியில் “வி1” படக்குழு

தரமான படங்களாக இருந்தால் தரம் பார்க்காமல் கொண்டாடுவதில் தமிழக ரசிகர்களுக்கு இணை தமிழக ரசிகர்கள் தான். சமீபத்தில் வெளியான பெரும்பாலும் புதுமுகங்கள் ஆட்கொண்ட “வி1” படமே இதற்கு சான்று.

திரில்லர் படத்தில் சமுக விழிப்புணர்வை சேர்த்து விருவிருப்பாக உருவான “வி1” திரைப்படம் வெளியான நாள் முதல், அப்படத்தை தமிழக சினிமா ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர்.

நாளுக்கு நாள் திரையரங்குகளும், படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போக வெற்றி மகிழ்ச்சியில் உள்ளது “வி1” படக்குழு.

இப்படத்தை கொண்டாடிய மக்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் தங்களது நன்றியை “வி1” படக்குழு தெரிவித்துக்கொள்கிறது.

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா முவ்மண்ட் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ்
வெளியிடுபவர் – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்
ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S.
இசை –  ரோனி ரப்ஹெல்
படத்தொகுப்பு – C.S.ப்ரேம் குமார்
கலை – VRK ரமேஷ்
SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ்
மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.