full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஆச்சரியத்தை வரவழைக்கும் சம்யுக்தா வர்மாவின் யோகா ஸ்டில்ஸ்

 

 

சரத்குமார், நெப்போலியன் நடித்த ‘தென்காசி பட்டணம்’ என்ற தமிழ் படத்திலும் ஒருசில மலையாள படத்திலும் நடித்த நடிகை சம்யுக்தா வர்மா, கடந்த 2002ஆம் ஆண்டு மலையாள நடிகர் பிஜூமேனன் என்பவரை திருமணம் செய்து அதன்பின் சினிமா வாழ்க்கையில் இருந்து ஒதுங்கினார்.

 

 

இருப்பினும் அவர் தொடர்ந்து யோகாவின் மீது கவனம் செலுத்தி கடந்த 17 ஆண்டுகளாக யோகா பயிற்சியாளராக இருந்து வருகிறார். தொடர்ச்சியாக ஒருவர் யோகாவில் ஈடுபட்டிருந்தால் எந்தவித நோயும் அண்டாது என்றும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு யோகா அவசியம் தேவை என்பதையும் அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்

 

 

இந்த நிலையில் சம்யுக்தா வர்மாவின் லேட்டஸ்ட் யோகா ஸ்டில்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஸ்டில்களை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தாங்களும் யோகாவில் ஈடுபட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.