தேஜூவை இயக்கும் கங்கணா

News

கங்கனா ரணாவத் இந்திப்பட உலகின் துணிச்சலான நடிகை. இவர் தற்போது ‘சிம்ரன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது, செப்டம்பர் 15-ந் தேதி திரைக்கு வருகிறது. இதை ஹன்சன் மேத்தா இயக்கி இருக்கிறார்.

கங்கணா அடுத்ததாக ‘தேஜூ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி கூறிய கங்கனா ரணாவத்….

‘‘நான் ‘தேஜூ’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறேன். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ‘தேஜூ’ படத்தின் வேலைகள் தொடங்க இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகும். இதில் முதல் முறையாக நான் 80 வயது பெண்ணாக நடிக்கிறேன்.

இது முழுக்க முழுக்க முதியவர்களைப் பற்றிய படம். இதில் தனது வயதைப்பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்பாக இருக்கும் பெண்ணாக நான் நடிக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

கங்கனாவின் மனிகர்னிகா பிலிம்ஸ் வழங்கும் இந்த படத்தை ஷைலேஷ்சிங் தயாரிக்கிறார்.