1942 ஆம் ஆண்டு மதுரையில் சி.பா.ஆதித்தன் அவர்களால் தொடங்கப்பட்ட “தந்தி” தொடங்கப்பட்ட நாளிதழ் பின்னாளில் “தினத்தந்தி” என்று மாறியது. தமிழ் செய்தித்தாள் வரலாற்றில் மாபெரும் புரட்சியை தினத்த்ந்தி செய்துள்ளது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.
வெறும் வானொலியை நம்பியிருந்த காலகட்டத்தில் செய்திகளை கடகோடி தமிழனுக்கும் கொண்டு சேர்ப்பதில் முதல்வனாக விளங்கிய தினத்தந்தி, வரலாற்றில் பல மைல்கற்களைக் கடந்து இன்று செய்தி ஊடகங்களின் மன்னனாகத் திகழ்கிறது.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கட்டிடத்தில் நடைபெற்ற இந்த பவள விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவர்கள் மட்டுமல்லாது தமிழக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்ரும் கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
செய்தி ஊடகத்துறையில் 75 ஆண்டுகாலம் நிலைத்து தனித்துவமாக நின்று பவளவிழா காணும் தினத்தந்திக்கு பல தலைவர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். அவர்களோடு சேர்ந்து “ஊடக ஜாம்பவான்” தினத்தந்திக்கு சினிமா பார்வையும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது!