full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

Think Music Originals வழங்கும், ரியோ ராஜ், அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள “கரக்கி” ஆல்பம் பாடல், பெரும் வரவேற்பை குவித்து வருகிறது !

பொங்கல் பண்டிகையையொட்டி இசை ரசிகர்களுக்காக, Think Music  தனது புதியஆல்பம் பாடலான ‘கரக்கி’ பாடலை  வெளியிட்டது. வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இந்த பாடல், ரசிகர்களிடம்  அற்புதமான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சுயாதீன ஆல்பம் பாடலை அடிக்ரிஸ் இசையமைத்துள்ளார் மற்றும் மிகவும் பிரபலமான நாட்டுப்புற கலை குழு ஜோடிகளான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர்  இப்பாடாலை பாடியுள்ளனர்.

அழகான இசை, பாடகர்களின் அற்புதமான குரல், நடிகர்களின் திறமை மிகுந்த  நடிப்பு ஆகியவை பாடலுக்கு அருமையான வரவேற்பை பெற்று தந்துள்ளது. கிராமத்து திருவிழாவின் போது ஒரு பையனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை முன்மொழிவது போன்ற இனிமையான மற்றும் கவர்ச்சிகரமான கருவினை  இப்பாடல் கொண்டுள்ளது. தலைசிறந்த ஒளிப்பதிவும், அற்புதமான நடன அமைப்பும் இந்தப் பாடலை, ஒரு சிறந்த சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

Think Music  பல்வேறு கருக்களில்  வித்தியாசமான களங்களில் பாராட்டுக்குரிய வகையிலான, சுதந்திரமான ஆல்பம் பாடல்களை இசை ஆர்வலர்களுக்குத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில் Think Music  நிறுவனத்திற்கு இப்பாடல்  மற்றுமொரு சார்ட்பஸ்டர் ஹிட்டாக அமைந்துள்ளது.