full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

கமலுடன் கூட்டணி குறித்து திருமா

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் தான் தற்போதைய ஹாட் டாபிக். நவம்பர் 7ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என்று கமல் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டு அங்கு கொட்டப்படும் கழிவுகளைக் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

கமலின் இந்த நடவடிக்கை குறித்து பல கட்சிகளின் தலைவர்களும் கருத்து கூறிவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பத்திரிக்கையளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் கூறியது,

“கமல் அரசியல் களத்திற்கு வருவதை வரவேற்கிறேன். ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு வருவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது” என்று கூறினார்.

மேலும், கமலுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு  பதிலளித்த அவர்,

“கமல் அவரது கொள்கை, கோட்பாடு குறித்து முதலில் வெளிப்படையாக தெரிவிக்கட்டும். பிறகு கூட்டணி குறித்து பேசலாம்” என்று தெரிவித்தார்.