full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாரதிராஜா தலைமையில் ஓவியா அண்ணனுக்கு திருமணம்

“களவாணி” படத்தில் நடிகராக அறிமுகமான திருமுருகன், யதார்த்தமான தஞ்சாவூர் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றார். அப்படத்தில் ஓவியாவின் அண்ணனாக நடித்திருந்த இவர், அரவாண், என்னமோ நடக்குது, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், 49 ஓ, ஈட்டி, பென்சில், கட்டப்பாவ காணோம் உள்பட பல படங்களில் நடித்தார்.

தற்போது ஓணான், அடங்காதே, டார்ச்லைட் படங்களில் நடித்து வருகிறார்.

திருமுருகனுக்கும், அவரது உறவுக்காரப் பெண் மோகனப்ரியாவுக்கும் திருமணம். மோகனப்ரியா, வருவாய் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியாற்றி வருகிறார். நேற்று 4ந் தேதி தஞ்சை அருகில் உள்ள பாப்பாநாடு கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. இயக்குனர் பாரதிராஜா விழாவுக்கு தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

திருமண விழாவில் இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.