கோலிசோடா 2-ல் தொண்டன் கனி

News

பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் மில்டன் தமிழில் `அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, `கோலிசோடா’, `பத்து என்றதுக்குள்ள’ `கடுகு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

அவரது இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் `கோலிசோடா’. அந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரிலீசான சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற அந்த படம், அனைவராலும் பாராட்டும்படி இருந்தது. இந்நிலையில், `கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் படநிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் தேசிய விருதினை வென்ற நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். சமுத்திரக்கனி இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கான்ஸ்டபிளாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.