மலேசிய கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கிய தோட்டம்

News
0
(0)

Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு “தோட்டம்” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார். நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார்.

மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்..

ஒளிப்பதிவு – சதீஷ் B சரண், இசை – சாய், பாடல்கள் – நா.முத்துக்குமார், அண்ணாமலை, மாணிக்கசண்முகம், எடிட்டிங் – வினோத்,

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – அரங்கண்ணல் ராஜ்

படம் பற்றி பேசிய அரங்கண்ணல் ராஜ், “ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவது அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே. இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்.

அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப்பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே. அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது. தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது.

அப்படி உருவாக்கிய தோட்டங்கள் இன்று பல ஆதிக்க சக்திகளிடம் கை மாறி விட்டது. அப்படி கை மாற இருந்த ஒரு தோட்டத்தை போராடி எப்படி மீட்கிறார்கள் என்பது கதை. 200 வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சனையை இதில் அலசியிருக்கிறோம்.

அதே போல கலப்புத் திருமணங்களை ஆதரிக்கும் விதமாக தமிழ்ப்பையனுக்கும் சீனப்பெண்ணுக்கும் கல்யாணம் மற்றும் தமிழ் படிப்பின் அவசியம் போன்ற சமூக விஷயங்களையும் இதில் சொல்லி இருக்கிறோம்.

மலேசிய நடிகர் நடிகைகள் தமிழ் தொழில் நுட்ப கலைஞர்கள் இணைந்து தோட்டம் படத்தை உருவாக்கி உள்ளோம். விரைவில் உலகமெங்கும் தோட்டம் வெளியாகிறது.” என்றார் இயக்குனர்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.