டிரெண்ட் ஆகும் துப்பறிவாளன்

News

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே.பாக்யராஜ், சிம்ரன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துப்பறிவாளன்’.

கார்த்தி வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அரோல் காரோல்லி இசையமைத்துள்ளார். அருண் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிந்தது. இறுதியாக விஷால் மற்றும் வினய் பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றை காட்சிப்படுத்தி வந்தார்கள். அதன் படப்பிடிப்பு முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு காண்பித்தனர். படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இதையடுத்து செப்டம்பர் 14-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கான பணிகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டிங் ஆகி உள்ளது. இப்படத்தில் அறிவுப் பூர்வமான துப்பறியும் காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், ஒரு மெல்லிய காதல் என ரசிகர்கள் கவரும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளது.