ஓடிடி-யில் வெளியாகும் டைட்டானிக்

General News

ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி நடித்துள்ள ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் திரையுலகம் பாதிப்பை சந்தித்துள்ளது. திரைக்கு வர தயாராக இருந்த 50-க்கும் மேற்பட்ட படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது.
இதனால் சிறு பட்ஜெட் படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட முனைப்பு காட்டி வருகின்றனர். அந்தவகையில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தால் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படம் வருகிற ஜூன் 19-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.