மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை “அகத்தியா” படத்தில் காணலாம் – ஐசரி கே கணேஷ்

cinema news
0
(0)

டாக்டர். ஐசரி கே. கணேஷ் அவர்களால் துவங்கப்பட்ட, தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அனீஷ் அர்ஜுன் தேவ் அவர்களின் வாமிண்டியா நிறுவனத்துடன் இணைந்து, தயாரிக்கப்பட்ட திரைப்படம் “அகத்தியா”.

“ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்” என்ற வசீகரிக்கும் கதைக்கருவுடன், அதிநவீன CGI உடன் இதயப்பூர்வமான மனித உணர்வுகளைக் கலந்து, திகில், திரில்லர் பாணியில், அனைவரும் ரசிக்கும் வகையில், ஒரு புதுமையான உலகைப் படைத்திருக்கும் “அகத்தியா” படத்தினை புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைப்பட இயக்குநருமான பா.விஜய் இயக்கியுள்ளார்.

மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் தென்னிந்தியப் பிரம்மாண்ட திரைப்படமான “அகத்தியா” திரைப்படத்தின் அற்புதமான டைட்டில் லோகோ வீடியோவை, தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசை என, இப்படத்தின் டைட்டில் லோகோ வீடியோ ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது – நான்கு மொழிகளில் அற்புதமான சிம்பொனி இசையுடன் வரும் டைட்டில், அதிரடி ஆக்சன் நிரம்பிய ஒரு மர்மமான புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் படம் குறித்துப் பகிர்ந்துகொண்டதாவது… “திகில்-த்ரில்லர் ஜானர் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது, ‘அகத்தியா’ மூலம் இந்த அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளோம். பரபர திரைக்கதையுடன், இதுவரை பார்த்திராத பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடன், மிகவும் பிரபலமான மார்வெல் திரைப்படங்களைப் போல ஒரு சாகச உலகை, பார்வையாளர்களுக்கு வழங்குவதே எங்கள் குறிக்கோள். ‘அகத்தியா’ கண்டிப்பாக ரசிகர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்” என்றார்.

2025 ஜனவரி 31 ஆம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. கற்பனை, திகில் மற்றும் நம் கலாச்சார பின்னணி ஆகியவற்றின் வசீகரிக்கும் கலவையுடன், இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களுக்கு இப்படம் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க உள்ளது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.