full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

டி.என்.பி.எஸ்.சி தேர்விற்கான வயது உச்சவரம்பு உயர்வு

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்:-

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, 1-ஏ மற்றும் 1-பி ஆகிய தேர்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பை 35-லிருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி., பி.சி ஆகிய பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வயது உச்சவரம்பு 35-லிருந்து 37 ஆகவும் இட ஒதுக்கீடு இல்லாத பிற பிரிவினருக்கு 30-லிருந்து 32 ஆகவும் வயது உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்படும். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மேலும் 264 பாடப்பிரிவுகள் புதிதாக உருவாக்கப்படும். ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.” என்பது போன்ற ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்