full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

வெட்டுக்கிளி வாங்க அலைமோதிய கூட்டம்…. வீடியோ வெளியிட்டு விளாசிய பிரபல நடிகை

நபர் ஒருவர் வெட்டுக்கிளியை சாப்பிடும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரபல நடிகை, அவரை கடுமையாக சாடியுள்ளார்.

சீனாவின் உகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலகம் ழுழுவதும் பரவி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்து வருகிறது. உகான் சந்தையில் உணவுக்காக பாம்பு, நாய், எலி, தேள், கரப்பான் பூச்சி, வவ்வால், முதலைகள், எறும்புத் தின்னி, ஒட்டகம் உள்ளிட்ட 122 விலங்குகளின் இறைச்சிகள் விற்கப்படுகின்றன. இந்த இறைச்சி சந்தையில் ஏதோ ஒரு விலங்கில் இருந்துதான் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியதாக கூறப்படுகிறது.
சீனாவில் வைரஸ் தொற்று குறைந்துள்ள நிலையில், அங்குள்ள சந்தைகளில் மீண்டும் இதே விலங்குகளை விற்கவும், வாங்கவும் தொடங்கி உள்ளனர். இதனை நடிகை ஸ்ரத்தா தாஸ் ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகும் இப்படி வவ்வால், எலி, நாய்கள், கரப்பான் பூச்சி, முயல், தேள் இதையெல்லாம் திண்கிறீர்களே? உங்களுக்கு புத்தி இல்லையா?” என்று பதிவிட்டு கண்டித்தார்.
இந்த நிலையில் தற்போது வெட்டுக்கிளிகளை சந்தையில் குவியலாக போட்டு விற்பது, அவற்றை பலர் வாங்கி செல்வது. சிலர் வெட்டிக்கிளிகளை உயிரோடு சாப்பிடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இதனை தமிழில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அன்பே ஆருயிரே. சிபிராஜுடன் லீ ஆகிய படங்களில் நிலா என்ற பெயரில் நடித்துள்ள இந்தி நடிகை மீரா சோப்ரா விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘’வெட்டுக்கிளிகளை உணவுக்காக விற்பனை செய்கின்ற வீடியோவை பார்த்தேன். இது உண்மைதானா. உண்மையிலேயே மனிதர்கள் வெட்டுக்கிளிகளை சாப்பிடுகிறார்களா. கொரோனாவில் இருந்து அவர்கள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லையா. அதிர்ச்சியாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்