full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

என்றைக்குமே அவர் மாஸ்டர் தான் – விஜய் சேதுபதி புகழாரம்

 

 

நடிகர் விஜய்சேதுபதி கொரோனா ஊரடங்கில் இணையதள கலந்துரையாடல் மூலம் சுவாரஸ்யமான சினிமா அனுபவங்களை பகிர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது: “ரஜினியை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் பேட்ட படத்தில் நடித்தேன். அவர் மிகவும் சுறுசுறுப்பானவர். ஒரு காட்சியில் எப்படி நடிக்க போகிறோம். திரையில் அது எப்படி வரும்.

 

 

 

 

ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்ற விவரங்களையெல்லாம் தெரிந்து வைத்து இருப்பார். ஒரு சாதாரண காட்சியையும் சிறப்பானதாக மாற்றி விடுவார். ஒரு காட்சி நன்றாக வந்துவிட்டால் இயக்குனரை பாராட்டுவார். ஒவ்வொரு காட்சியையும் அழகாக யோசித்து ரசித்து செய்கிறார். சுற்றி இருக்கும் நடிகர்களையும் கவனிப்பார். இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே அவர் மாஸ்டர்தான்.” இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.