full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

பெண்களை பாதுகாக்க வேண்டும். – நடிகை ராஷ்மிகா

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டி வருமாறு:-

“எனக்கு தன்னம்பிக்கை அதிகம். ஒருவரின் அழகு தன்னம்பிக்கையில்தான் தெரியும். பாராட்டையும், விமர்சனத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. நிறைய சவால்களை எதிர்கொண்டேன். அதை பார்த்து தளர்ந்து போகாமல் எப்படி மீண்டு வருவது என்று கற்றுக்கொண்டேன். எனக்கு மோசமான அனுபவங்கள் ஏற்படவில்லை. ஆனால் அதை சிலர் சந்தித்ததாக சொல்வதை கேட்கும்போது கஷ்டமாக இருந்தது. சமூகத்தில் பெண்கள் நிலைமை கொடூரமாக உள்ளது. ஒரு பக்கம் பெண்கள் நிறைய சாதிக்கிறார்கள். இன்னொரு பக்கம் பெண்களை மானபங்கம் செய்வதும் நடக்கிறது. புதிதாக ஹத்ராஸ் சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆண்டு இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். மாற்றம் ஒருவரால் சாத்தியமாகாது. எல்லோரும் சேர்ந்து மாற்றத்தை உருவாக்கினால்தான் முடியும். எனக்கு ஆன்மீக சிந்தனை அதிகம், மனது சரியில்லை என்றால் தியானம் செய்வேன்.”

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.