full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 03/08/17 !

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஜம்மு – காஷ்மீர் : ஷோபியானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீரமரணம்.

ஜம்மு – காஷ்மீர் : பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.

ஹரியானா மாநிலத்தில் கடந்த மூன்று மாதங்களில் சட்ட விரோதமாக 134 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு சிறையில் நடந்த முறைகேடுகள் பற்றி சிறைத்துறை டிஜிபி மற்றும் கர்நாடக அரசு உயர் அதிகாரிகளுக்கு எழுதிய 2 கடிதங்களையும் உயர்மட்டக்குழுவிடம் ஒப்படைத்து விட்டேன்-முன்னாள் டிஐஜி ரூபா.

கோடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு – குண்டர் சட்டத்தில் 4 பேர் கைதானதை எதிர்த்த வழக்கில் அக். 26-க்குள் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஜனவரி 1 முதல் ஆக.3 வரை கர்நாடகாவிற்கு 60 டிஎம்சி தண்ணீர் கிடைத்தும் தமிழகத்திற்கு 9 டிஎம்சி மட்டுமே தந்துள்ளது – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்.

ரேஷன் மண்எண்ணெய் விலை உயர்கிறது : படிப்படியாக உயர்த்தி மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு.

கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறக்கப்பட்டதாலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தான் கேட்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் தீரன் சின்னமலையின் வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் – முக.ஸ்டாலின்.

அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை மீண்டும் சம்மன்.

சென்னையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் டிஜிபி டிகே.ராஜேந்திரன் சந்திப்பு.

ரூ.89 கோடி விவகாரத்திலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகியிருக்க வேண்டும் : முக.ஸ்டாலின்.

ஓபிஎஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு வந்தால் ரூ.5 கோடி தருவதாக டிடிவி, எடப்பாடி அணியினர் பேரம் பேசுகின்றனர் : எம்எல்ஏ சண்முகநாதன்.

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய மனுவின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

நவோதயா பள்ளிகளில் 12ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்க முடியுமா?: மத்திய அரசு 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

டி.டி.வி தினகரனுடன் எம்.எல்.ஏக்கள் சந்திப்பு.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி புதிய சட்டமுன்வடிவை மத்திய அரசிடம் வழங்கியுள்ளோம் : அமைச்சர் விஜயபாஸ்கர்.

குஜராத் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா அறிமுகம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

சென்னை வடபழனியில் பெஃப்சி நிர்வாகிகளுடன் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆலோசனை.

கிரண்பேடி குறித்து ராம்நாத் கோவிந்திடம் பேசவில்லை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

தீரன் சின்னமலை படத்திற்கு மலர் தூவி முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் மரியாதை.

நீட் தேர்வில் புதுச்சேரிக்கும் விலக்கு கோரி மத்திய அமைச்சர் நட்டாவிடம் கோரிக்கை வைத்தோம்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

முதல்வர் உள்பட 5 அமைச்சர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரகசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிறையில் உள்ள சசிகலாவை முதல்வலர் உள்பட 5 அமைச்சர்கள் சந்தித்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆணழகன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுக்களை தீபாவளி பண்டிகை முதல் ரிலீஸ் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநராக கிறிஸ்டோபர் ரே பொறுப்பேற்றுக் கொண்டார்.

மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்களின் நிரந்திர வைப்பு தொகைக்கு 8% வட்டி உறுதி செய்யப்படும் : அருண் ஜெட்லி.

பணம் பறிக்கும் நோக்கத்துடன் சினிமா பைனான்சியர் போத்ரா தொல்லை கொடுத்ததாக பாரிவேந்தர் புகார்.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.

கிரிக்கெட் வீரர் புஜாரா, வீராங்கனை ஹர்மன்ப்ரீத் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.

ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிற்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு.

பாராலிம்பிக் வீரர் ஜஹாரியாவுக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கில் மாநகர காவல் ஆணையர் பதில் தர உத்தரவிட்டு வழக்கு 14க்கு ஒத்திவைப்பு.

சென்னை அண்ணா சாலையில் மாநகரப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ஸ்பென்சர் பிளாசா எதிரில் மாநகரப் பேருந்து தடம் எண் 18k விபத்துக்குள்ளானது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 111.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1,086 மில்லியன் கன அடியாக உள்ளது.

மணப்பாறை அருகே கீழபூசாரிப்பட்டியில் ரயில் மோதியதில் 27 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சிவாஜி சிலை அகற்றப்பட்டதை கண்டித்து நெல்லையில் காங்கிரசார் அரை நிர்வாண போராட்டம்