full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 12/07/17!

கதிராமங்கலம் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப வேண்டுமென அதிமுக எம்பிக்களுக்கு தமிழக முதல்வர் அறிவுறுத்தல்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 4மணிக்கு தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

அமர்நாத் தாக்குதல் : ஓட்டுநர் சலீமுக்கு காஷ்மீர் அரசு வெகுமதி.

ரம்ஜான் நோன்பு ஒரு தொற்றுநோய் – குஜராத் பாடப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்து.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், 2017 ஜூன் 30 வரை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க சமாதான் திட்டம் கொண்டுவரப்படும் – வணிகவரித்துறை.

குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை தேவையில்லை : தேர்தல் ஆணையம்.

11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

பத்திரப்பதிவு கட்டணம் வரும் காலங்களில் குறைக்க நடவடிக்கை: பேரவையில் அமைச்சர் வீரமணி தகவல்.

பிக்பாஸை தடை செய்; கமலை கைது செய் : இந்து மக்கள் கட்சி மனு.

காலா படத்தின் தலைப்பு மற்றும் கதைக்கு உரிமை கோரி வழக்கு : இந்த வழக்கில் ரஜினி மற்றும் ரஞ்சித் உள்ளிட்டோருக்கு பதிலளிக்க மேலும் ஒரு வாரத்திற்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐயின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வரும் 26ஆம் தேதி நடைபெறும் : தற்காலிக தலைவர் கன்னா.

சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற வழக்குகளால் அரசுக்கு ரூ.900 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது : அமைச்சர் கே.சி.வீரமணி.

பாவனா வழக்கில் நடிகர் திலீப்பை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை.

சென்னையில் மின்சார தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேட்டில் துணை மின் நிலையம் : அமைச்சர் தங்கமணி.

துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் ஆதரவு கோரினார் ராகுல்காந்தி.

இன்று தொடங்கவிருந்த வேளாண் இளநிலை படிப்புகளுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஒத்திவைப்பு : கோவை வேளாண் பல்கலைகழக முதல்வர்.

குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி.

தேசிய நெடுஞ்சாலை டெண்டர் பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 7.61 கோடி லஞ்சம்: அமெரிக்க நிறுவனம் ஒப்புதல்.

மோடியின் கொள்கைகள் காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஒரு இடத்தை உருவாக்கி தந்துள்ளது : ராகுல் காந்தி.

ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் எய்ம்ஸ் இயக்குநர் பதவிகளை நிரப்ப அமைச்சரவை ஒப்புதல்.

தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் கார் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு – 6 பேர் படுகாயம்.

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் எடுத்துதந்த புகாரில் முஸ்தபா என்பவர் கைது.

சென்னையில் மின்சார தேவையை கருத்தில் கொண்டு கோயம்பேட்டில் துணை மின் நிலையம் : அமைச்சர் தங்கமணி.

துணை ஜனாதிபதி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்திக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரிடம் ஆதரவு கோரினார் ராகுல்காந்தி.

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு.

சிறைக்குச் செல்லும் போது செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் மலையாள நடிகர் திலீப்.

அருணாச்சல பிரதேசம், அந்தமானில் நெடுஞ்சாலை மதுக்கடைகளுக்கான விதிமுறைகள் தளர்வு.

அருணாச்சல், அந்தமான் நெடுஞ்சாலைகளில் 220 மீட்டருக்குள் மதுக்கடைகள் அமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்.

மலைப்பிரதேசங்கள், வனப்பகுதிகள் உள்ளதால் அருணாச்சல், அந்தமானுக்கு விதிமுறைகள் தளர்வு.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸால் தேடப்படும் டிஎஸ்பி காதர்பாஷா முன்ஜாமீன் மனு 18ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு : உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தமிழக அரசின் வரி வருவாய் வசூல் கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.5,867 கோடி அதிகரித்துள்ளது.

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள முகுல்வாஸ்னிக் அறையில் தீ விபத்து; தீயை அணைக்கும் பணியில் காங்கிரஸ் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

கோவாவில் 20 ஆண்டுகளாக இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு.