full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

இன்றைய பரபரப்பு செய்திகள் 20/11/17 !

* தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

* மாநில அரசை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டம். பாஜகவால் தமிழகத்தில் காலை மட்டுமல்ல, கையைக் கூட ஊன்ற முடியாது – திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின்.

* இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியதில் முறைகேடு என புகார் – ஆட்சியர்கள் சகாயம் உள்ளிட்ட 3 பேர், 2 வாரத்திற்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ்.

* அதிமுக திமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறேன் : பாமக நிறுவனர் ராமதாஸ்.

* அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என ஷியா வக்ஃபு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. இதேபோல் லக்னோவில் மசூதி கட்டவும் ஷியா வக்ஃபு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

* ஆர் கே நகர் இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம்.

* திமுக தொடர்ந்த வழக்குகளால் தான் ஆர் கே நகர் தேர்தலை நடத்த முடியவில்லை – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு.

* பத்மாவதி திரைப்படத்திற்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் நிதியுதவி அளித்துள்ளதாக ராஜபுத்திர கர்னி சேனா தலைவர் லோகேந்திர சிங் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

* சபரிமலை ஐயப்பன் கோயிலில் இனி விஐபி தரிசனம் கிடையாது பத்மகுமார் அறிவிப்பு -தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார்.

* பத்மாவதி படத்துக்கு தடை விதிக்கக் கோரி மத்திய பிரதேச முதலமைச்சரிடம் ராஜபுத்திர சமூகத்தினர் மனு.

* போயஸ் இல்லத்தில் சோதனை நடத்த துணையாய் இருந்தவர்களை ஜெயலலிதா ஆன்மா சும்மா விடாது – அமைச்சர் செல்லூர் ராஜு.

* கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பேரணியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

* முட்டை விலை அதிகமாகிவிட்டது என காரணம் காட்டி சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை நிறுத்த அரசு முயற்சி – மு க ஸ்டாலின் குற்றச்சாட்டு.

* குஜராத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கற்பனை உலகில் வாழும் கமல் ட்விட்டரில் இருந்து வெளிவர வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது – அமைச்சர் ஜெயகுமார்.

* குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க வேண்டியது நம் அனைவரது கடமை – நடிகை திரிஷா.

* அரசு தவறு செய்தால் அதை ஜனநாயக ரீதியில் சுட்டிக்காட்டலாம். நடிகர் கமல் கூறுவது போல் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் நேரடியாக புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஜெயக்குமார்.

* கமல் கருத்தைப் புரிந்து கொள்ள கோனார் தமிழ் உரை தேவைப்படுகிறது – தமிழிசை.

* முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு அளித்து, பின் அணி மாறிய ஜக்கையன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளக்கம் அளிக்க அவகாசம் கோரியும் வழங்காமல் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர் – தினகரன் ஆதரவு தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம்.

* காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 16ல் நடைபெறவுள்ளது டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு.

* பத்மாவதி திரைப்படத்தில் நடித்த தீபிகா படுகோனை உயிரோடு எரிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் – அகில இந்திய ஷத்ரிய மகாசபா.

* மதுரை மேலூரில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மேலூர் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5 ஆயிரம் விவசாயிகள் சாலை மறியல்.

* அதிமுகவை அழிப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கையே வருமானவரி சோதனை. – டிடிவி தினகரன்.

* சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, கிரிமினல்களை என்கவுன்டரில் சுட்டுக் கொல்வோம். குற்றவாளிகளின் வாழ்க்கை இனி கடினமானதாக இருக்கும் – உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

* கடலோர காவல்படை ராமேஸ்வரம் மீனவர்களை சுடவில்லை என அமைச்சர் கூறியது கண்டிக்கத்தக்கது – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

* குஜராத் தேர்தலுக்கான 77 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.

* விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவிடம் விசாரணையை தீவிரப்படுத்த வருமான வரித் துறையில் தனி அதிகாரிகள் குழு அமைப்பு : பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசியையும் விசாரிக்க முடிவு.

* நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி அதிமுக பிரமுகர் கல்யாணி 11 லட்சம் மோசடி செய்ததாக தீக்குளித்த தங்கராசு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

* புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, ஆன் லைனில் பதியப்படும், கருத்துகளை அரசு பரிசீலிக்கும் – அமைச்சர் செங்கோட்டையன்.

* மடியில் கனம் இருப்பதாலேயே வருமான வரி சோதனை குறித்து டிடிவி.தினகரன் பயப்படுவதாக பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.

* ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்த பின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம் தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது – நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு.

* சென்னையில் விதிகளை மீறி ரூ.174.5 கோடியை வெளிநாட்டிற்கு அனுப்பியதாக 6 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு.

* பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி முறைக்கேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது.

* மதுரை மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, விவசாயிகளுக்கு ஆதரவாக தாலுகா முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்.

* திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தைச் சேர்ந்த முகமது உமர் சித்திக் என்ற 8 வயது சிறுவன் மர்ம காய்ச்சலால் உயிரிழப்பு.

* ஈரோடு செம்மம்பாளையத்தில் வீட்டின் முன் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி பழனிசாமி, அவரது மகன் துரைசாமி ஆகியோரை அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

* ரூ.175 கோடி மோசடி செய்த சென்னையில் உள்ள 6 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு.

* புதுச்சேரியில் இலவச திட்டங்களுக்குப் பதிலாக மக்களுக்கு சிறுகடன்களை வழங்கி சுயமுன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் – துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.

* உலக பாரம்பரிய வாரத்தையொட்டி தொல்லியல் துறை பராமரிக்கும் புராதன சின்னங்களை இலவசமாக பார்க்கலாம்; மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை வரும் 25 ஆம் தேதி வரை இலவசமாக மக்கள் பார்க்கலாம்.

* பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு.

* ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி கழுத்தறுத்துக் கொலை.

* தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரத்தில் முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக்கொலை : இரட்டை கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இருவரும் காவல்நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற போது கொலை செய்யப்பட்டனர்.

* வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.