full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 17/7/2017

• நாட்டின் 14-வது ஜனாதிபதி யார்? இன்று தேர்தல்- ஏற்பாடுகள் மும்முரம்!
• 10 பேரை விடுதலை செய்.. கதிராமங்கலத்தில் தொடரும் காத்திருப்பு போராட்டம்
• நடிகர் சரத்குமாரை கட்சியோடு வளைத்துப் போடுவதில் பாஜக படுமும்முரம்!
• தமிழக அரசு மீதான விமர்சனத்துக்காக கமல்ஹாசனை அமைச்சர்கள் மிரட்டுவதா? ஸ்டாலின் கடும் கண்டனம்
• நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை- ஸ்டாலின் கண்டனம் குறித்து ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து
• ஜனாதிபதி தேர்தல்: பாமக புறக்கணிப்பு- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காததால் ராமதாஸ் அதிரடி அறிவிப்பு!
• விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி ரோஜர் பெடரர் சாதனை!
• பணத்துக்காக கமல் எதையும் செய்வார்- வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும்- அமைச்சர் சி.வி. சண்முகம்
• ஓஎன்ஜிசி சுற்றுச் சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்.. திருவாரூரில் பரபரப்பு
• பசு பாதுகாவலர்கள் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை.. மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்
• படைகளை திரும்ப பெறாவிட்டால்… நிலைமை மோசமாகும்… இந்தியாவுக்கு சீனா “வார்னிங்”
• நீட் தேர்வில் விலக்கில்லை.. எதுக்கு ராம்நாத்துக்கு ஆதரவு.. அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டது தபெதிக
• தமிழகத்தில் அசாதாரண சூழல்.. சாதி, மதக் கலவரங்களை தூண்ட திட்டம்.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி எச்சரிக்கை
• சென்னை பேக்கரி தீவிபத்து.. தீயணைப்பு வீரர் ஏகராஜ் குடும்பத்துக்கு ரூ.13 லட்சம் நிவாரணம்
• கொடுங்கையூர் தீவிபத்தில் எரியும் தீ முன்பு செல்ஃபி எடுத்த 48 பேர் படுகாயம்… போலீஸ் தகவல்
• ஜம்மு காஷ்மீரில் விபத்து: அமர்நாத் யாத்ரீகர்கள் 16 பேர் பலி- 30 பேர் படுகாயம்!
• அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது!
• ஓராண்டுக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுழலும் கேமரா அமைக்கப்பட்டது.
• தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது!
• கோவையிலிருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது சேவையைத் துவங்குகிறது!
• கொடுங்கையூர் தீ விபத்தில், காயமடைந்து, சிகிச்சை பெறுபவர்களுக்கு முதலமைச்சர் நேரில் ஆறுதல்..!
• நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது
• யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேர் கைது
• நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற 700 ஒப்பந்த தொழிலாளர்கள் கைது
• இங்கிலாந்தை போன்று இந்தியாவிலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அனுமதி!
• கடவுச்சீட்டுக்கு இனி நான்கு கட்டங்களாக விசாரணை: போலிகளை தடுக்க சென்னை காவல்துறை நடவடிக்கை
• ஜூலைக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டையை திருத்தும் வசதி
• ஊழல்வாதிகளிடம் இருந்து விலகியிருங்கள்: பிரதமர் மோடி
• பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 32 கைதிகள் வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம்
• பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விவிஐபி வசதி: வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் அழிப்பு – இரண்டாவது அறிக்கையில் டிஐஜி ரூபா தகவல்
• திமுக ஆட்சியின்போது குடும்ப ஆதிக்கத்தால் திரைப்படத்துறை பாதிப்பு: தமிழிசை
• தமிழக அமைச்சர்கள் பொதுவெளியில் நிதானமாக பேச வேண்டும்: திருமாவளவன்
• நீட், ஹைட்ரோகார்பன் திட்டம், காவிரி பிரச்னையில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: வைகோ
• பெண்களை இழிவுபடுத்தியதாக பா.ஜனதா எம்.பி. ரூபா கங்குலி மீது வழக்குப்பதிவு
• துணை ஜனாதிபதி தேர்தல் கோபால கிருஷ்ண காந்தி ஜூலை 18ல் வேட்பு மனு தாக்கல்
• ஜனாதிபதி தேர்தல்: சமாஜ்வாடி இருபிரிவானது, மீராவிற்கு அகிலேசும், கோவிந்துக்கு முலாயமும் ஆதரவு
• தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம்
• கமல்ஹாசனுக்கு எதிராக பேசுவதை அமைச்சர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் வைகோ பேட்டி
• ஜெயலலிதா இருந்தபோது வாய் பொத்தி நின்றவர் கமல்…. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகிறார்-தமிழிசை சௌந்தரராஜன் சாடல்
• ஆகஸ்ட் 10-ல் அஜித் நடித்த ‘விவேகம்’ படம் வெளியீடு: படக்குழு உறுதி