full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இன்றைய முக்கிய செய்திகள் 29/7/2017

• பனாமா பேப்பர்ஸ் வழக்கு: பிரதமர் நவாஸ் ஷெரிப் தகுதி நீக்கம்- பாக். உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
• முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் செபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகத் தேர்வு எனத் தகவல்!
• சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்பது தவறில்லை: உச்சநீதிமன்றம் கருத்து
• குஜராத்தில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறுவதைத் தடுக்க எம்.எல்.ஏக்களை பதுக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல்
• ராஜ்யசபா தேர்தலில் பாஜக சித்து விளையாட்டு: குஜராத் காங். எம்எல்ஏக்கள் 44 பேர் கூவத்தூர் பாணியில் பெங்களூரில் தங்கவைப்பு
• நாகை மாவட்டத்தை பெட்ரோலிய ஆய்வு மண்டலமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு: குறைதீர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள்.
• தமிழகத்தில் நீர்நிலைகளில் சீமைக்கருவேல மரங்கள் வெட்ட தடை நீக்கம் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
• குரூப்-2 தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணைய தளத்தில் வெளியானது. www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் ஹால்டிக்கெட்டுகளை தரவிறக்கிக் கொள்ளலாம்!
• பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் ஆஜர்!
• குட்கா விற்பனைக்கு டிஜிபி ராஜேந்திரன் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவு!
• வன்முறையைத் தூண்டினேனா? என்னை சிறையில் அடைக்க பாஜக சதித் திட்டம்.. சீமான் ஆவேசம்
• கோலாகலமாக தொடங்கியது புரோ கபடி லீக்.. முதல் போட்டியில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்ற தமிழ் தலைவாஸ்
• மகளிர் கிரிக்கெட் கேப்டன் மித்தாலிக்கு வீட்டு மனை, ரூ.1 கோடி பரிசு.. தெலுங்கானா அரசு அதிரடி
• மருத்துவ மாணவர்களுக்கு 85% உள்ஒதுக்கீடு ரத்து: மேல்முறையீட்டு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு
• இப்போதுள்ள ஆட்சியை மட்டுமல்ல, 50 ஆண்டுக் கால ஊழல் பற்றி கமல் பேச வேண்டும்: சீமான் ஆவேசம்
• நித்யானந்தா தொடர்ந்த வழக்கு.. மாஜி சீடர் லெனின் கருப்பன் கைது
• பீகார் அரசியல் புயல்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘தப்பினார்’ நிதிஷ்குமார்!
• ஓஎன்ஜிசியை எதிர்த்துப் போராடிய 10 பேருக்கு ஆக. 11 வரை காவல் நீட்டிப்பு.. கதிராமங்கலம் பொதுமக்கள் கொந்தளிப்பு
• புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீக்க சீமான் கோரிக்கை
• விடாமல் வெளுக்கும் ராஜேந்திர பாலாஜி.. விஜய், டோட்லா மற்றும் ஆரோக்கியா பால் வகைகள் தரம் குறைந்தவை: நீதிமன்றத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை!
• தினகரன், திவாகரன் சேர்ந்துட்டாங்க… ஓபிஎஸ் தனி மரமாவார்- சம்பத் ஆவேசம்!
• 6 மாதம் பரோல் கேட்டு நளினி ஹைகோர்ட்டில் மனு- மகள் திருமணத்திற்கு லண்டன் செல்வதாக தகவல்
• ராஜ்யசபா தேர்தல்: அகமது படேலை ஜெயிக்க வைக்க ‘கூவத்தூர்’ பாணியை கையிலெடுத்த குஜராத் காங்.
• 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் செப்டம்பருக்குள் அமல்படுத்தப்படும்: அரசு ஊழியர் சங்கம் தகவல்
• அ.தி.மு.க. ஆட்சி குறித்து பேசிவரும் கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறை திரைப்பட ‘கிளைமாக்ஸ்’தான்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
• உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி ஆக. 7-ந்தேதி கோட்டையை நோக்கி பாஜக சார்பில் பேரணி: தமிழிசை
• எடப்பாடி பழனிசாமி ஆட்சியை குட்கா ஊழல் ஒன்றே கவிழ்த்து விடும்: மு.க.ஸ்டாலின் பேட்டி

• பீகாரை தொடர்ந்து ஒடிசாவில் அதிரடி முதல்வர் பட்நாயக்கை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க புகார்

• ஸ்டாலின் கைது விரும்பத்தகாதது ஓபிஎஸ் பேட்டி

• மொடக்குறிச்சி IOB வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
• எய்ம்ஸ் அமையும் இடத்தை மத்திய அரசே முடிவு செய்யும்: தமிழக அரசு பதில் மனு
• ஆன்லைனில் குவாரிகளில் மணல் புக்கிங் விவகாரம் டூவீலர், கார் எண்களை பதிவு செய்து நூதன மோசடி: முறையாக பதிவு செய்த 65,000 லாரிகள் காத்திருப்பு
• அடாவடி ஆட்சி முடிவுக்கு வந்தது: நவாஸ் தகுதி நீக்கத்தை கொண்டாடும் இம்ரான் கான்
• குஜராத்தில் மேலும் 3 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் பாஜகவில் இணைந்தனர்
• மூன்று முறை பிரதமர் பதவி: ஒருமுறை கூட பூர்த்தி செய்யாத நவாஸ்
• எம்.பி.பி.எஸ் கலந்தாய்வை நடத்துவதற்காக ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் ஏற்பாடுகள்
• அஇஅதிமுக-வின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.கே.சசிகலா நீக்கப்பட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியால் தொடரப்பட்ட பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஆணை
• காலே டெஸ்ட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 498 ரன்கள் முன்னிலை
• புத்த மதத்துக்கு மாறிய மகள் அக்ஷராவுக்கு கமல் வாழ்த்து!
• புதுவையின் முதல் ரயில்வே மேம்பாலம்: திறந்து வைத்தார் முதல்வர் நாராயணசாமி
• டிஜிபி டி.கே. ராஜேந்திரனை பணி நீட்டிப்பு செய்தது சரியே: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு
• சென்னை திருவொற்றியூர் மேம்பாலம் திறப்பு: பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார் முதல்வர்
• பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக் கோரி மதிமுக சார்பில் 31ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: வைகோ
• காவிரி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அன்புமணி ராமதாஸ் 3 நாள் பிரசார பயணம்
• இந்தியா-சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வி
• வரதட்சணை புகாரில் உடனே கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
• டெல்லியில் கலப்பையை தோளில் சுமந்து விவசாயிகள் ஊர்வலம்
• ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கியதில் ரூ.6,831 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. அறிக்கையில் தகவல்
• பெங்களூரு மெட்ரோவில் இந்தி மொழியில் தகவல் பலகை கிடையாது சித்தராமையா திட்டவட்டம்
• பாகிஸ்தான் எல்லையில் தயார் நிலையில் இருக்குமாறு பாதுகாப்பு படைகளுக்கு ராணுவ தளபதி உத்தரவு
• பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக மாத்ருபூமி ஆசிரியர் கைது செய்யபட்டார். இந்த விவகாரம் குறித்து அதே டிவியில் நேரடி விவாதம்
• பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பு சார்பில் டெல்லியில் நேற்று உண்ணாவிரத போராட்டம்
• திராவிட கட்சிகள் மீது தமிழக மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
• சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பு – தமிழக கவர்னர் அறிவிப்பு
• எனக்கும், தினகரனுக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது- திவாகரன்
• போதை மருந்து விவகாரம்: நடிகர் ரவி தேஜாவிடம் 10 மணி நேரம் விசாரணை
• மத போதகர் ஜாகிர் நாயக் தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு
• சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்கு
• தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை ஓரிரு நாளில் திரும்புகிறார்கள்…