full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக கருதப்படும் சோமசுந்தரம் தற்போது ‘டாப்லெஸ்’ (Top less) எனும் ஒரு வெப் சீரிஸில் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

ஆரண்ய காண்டம், ஜோக்கர் போன்ற வெற்றி படங்களில் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பலரின் மனதையும் கவர்ந்த குரு சோமசுந்தரம், இப்போது இணைய தொடர்களிலும் (வெப் சீரீஸ்களிலும்) தன் திறமையை வெளிப்படுத்தி  தடம் பதிக்க உள்ளார்.

இந்த வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்க உள்ளது. zee5 மற்றும் இயக்குனர் கே எஸ் சிணீஷின் Soldiers Factory நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த தொடர், இயக்குனர் தினேஷ் மோகனால் இயக்கப்பட உள்ளது. குரு சோமசுந்தரத்தை தவிர இத்தொடரில் பல திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர்.

பாண்டியநாடு படத்தில் வில்லனாக நடித்து கலக்கிய ஹரிஷ் உத்தமன், கோலமாவு கோகிலா மற்றும் மாநகரம் போன்ற வெற்றி படங்களில் வில்லனாக நடித்த அருண் அலெக்சாண்டர், சென்னை டு சிங்கப்பூர் எனும் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த், மற்றும் இது வேதாளம் சொல்லும் கதை தயாரிப்பாளர் பசாக் இந்த இணையத் தொடருக்கு ( வெப் சீரிஸிக்கு) தங்கள் நடிப்பின் மூலம் பலம் சேர்க்க உள்ளனர்.

இந்தியாவின் மிக வேகமாக வளரும் OTT தளமான Zee 5 இந்த வெப்  சீரிஸ்சை இயக்குனர் கே எஸ் சிணீஷின் சொல்டிர்ஸ் ஃபேக்டரி (Soldiers Factory) நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கிறது. இந்த வெப் சீரிஸ் இயக்குனர்  சிணீஷின் சொல்டிர்ஸ் ஃபேக்டரியின் இரண்டாவது தயாரிப்பாகும்.

நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடித்து வெற்றி பெற்ற பலூன் திரைப்படத்தை இயக்கிய  சிணீஷ் இந்த வெப் சீரிஸ் தவிர மற்றும் ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார். திறமையான நடிகர்கள் மட்டுமின்றி திறமையான டெக்னீசியன்களையும் கொண்டுள்ளது ‘டாப்லெஸ்’ எனும் இத்தொடர்.

இரண்டு படப்பிடிப்பாளர்கள் விஷால் விஜயன் மற்றும் விஷ்வேஷ் இத்தொடரில் பணியாற்ற உள்ளனர். அதேபோல், அம்ரித் ராவ் மற்றும் அரவிந்த் வெங்கடேஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இத்தொடரில் பணிபுரிய உள்ளனர். இயக்குனர் தினேஷ் மோகனும் எழுத்தாளர் சன்மார்கனும் இணைந்து எழுதிய இந்த கதை பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது!