full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

டிராஃபிக் ராமசாமி டீஸரை வெளியிட்ட பிரபலம்

‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டீசரை திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிட்டிருக்கிறார். படத்தின் முன்னோட்டம் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த சகாயம் அவர்கள் கூறும் போது ,

“டிராஃபிக் ராமசாமி ஒரு அரியவகை சமூக செயற்பாட்டாளர் . தைரியமாக சாலையில் இறங்கிப் போராட்டம் செய்பவராக தொடங்கி பல்வேறு தளங்களில் இந்த 85 வயதிலும் தன்னிச்சையாகவும் தன்னம்பிக்கையோடும் அநீதிக்கு எதிராகப் போராடி வரும் போராளி. அவரின் வாழ்வை பிரதிபலிக்கும் விதமாக டிராஃபிக் ராமசாமி படம் உருவாகியுள்ளது.

துணிச்சலான கருத்துகள் கூறித் தன் படங்களின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் படத்தில் டிராஃபிக் ராமசாமியாக நடித்ததுடன் தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன். இது நிச்சயம் சமூகத்தின் குரலுக்கான படமாக இருக்கும் என்று நம்புகிறேன், வாழ்த்துக்கள்.” என்று பாராட்டி வாழ்த்தினார்.

 

இப்படத்தில் கதை நாயகனாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடிக்க அவரது மனைவியாக ரோகினி நடிக்கிறார். புதுமுக இயக்குநர் விக்கி இயக்குகிறார். பிரகாஷ்ராஜ், சீமான், குஷ்பூ, ஆர்.கே. சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி , மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா என்று பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றுமொரு பிரபல நடிகரும் சிறப்பு வேடத்தில் வருகிறார்கள். படத்தின் ஒளிப்பதிவை குகன் எஸ். பழனி கவனிக்கிறார். இசை ‘இருட்டறையில் முரட்டு குத்து’ புகழ் பாலமுரளி பாலு. எடிட்டிங் பிரபாகர், கலை ஏ.வனராஜ், சண்டைக் காட்சி – அன்பறிவு, கிரீன் சிக்னல் இப்படத்தை தயாரித்துள்ளது.