பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது

Special Articles
0
(0)

பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது

 

 

அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.

ஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.

இதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது.  தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.

 

 

*பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில்

நேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.

அவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியா கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.

 

 

 

2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என அட்டகாசமான நடிகர்கள் நிறைந்துள்ளனர். 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.

#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.

யூடியூப் இணைப்பு: https://www.youtube.com/watch?v=vzfe8UEJFd0

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.