இளம் தலைமுறை இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர்களாகக் கருதக் கூடிய பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உட்பட பல திறமையாளர்களை தனது “திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்” அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் C.V.குமார்.
இவரது தயாரிப்பில் வெளியான “அட்டகத்தி”, “பீட்சா”, “சூது கவ்வும்”, “முண்டாசுபட்டி”, “இன்று நேற்று நாளை”, “இறுதிச் சுற்று” என ட்ரேட்மார்க் சினிமாக்களை தயாரித்து ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்க்கத் தெரிந்த தயாரிப்பாளராக அடையாளம் பெற்றார்.
கடைசியாக, சந்தீப் கிஷன் நடித்த “மாயவன்” வெற்றி படம் மூலமாக இயக்குனராகவும் அவதாரமெடுத்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். இந்நிலைலையில் தற்போது, “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” எனும் புதிய படத்தை தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார்.
இப்படத்தில் வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன், அசோக் குமார், பகவதி பெருமாள், இயக்குனர் ராமதாஸ், பிரயங்கா ருத் (கதாநாயகி) ஆகியோர் நடிக்கின்றனர். சென்னையில் துவங்கிய “கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்” படத்தின் படப்பிடிப்பு தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது.