‘ஓவியா’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ‘ட்ரெண்ட் மியூசிக்’..!
![](http://www.cinemapaarvai.com/wp-content/uploads/2020/03/Oviya-Movie-Stills-012.jpeg)
இமால்யன் என்டர்டைன்மெண்ட் காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் ‘ஓவியா’ எனும் திரைப்படம் விரைவில் வெளியாகயுள்ளது. இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் 2 தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
![](http://www.cinemapaarvai.com/wp-content/uploads/2020/03/Oviya-Movie-Stills-006-1024x683.jpg)
இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை ‘ட்ரெண்ட் மியூசிக்’ நிறுவனம் பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக காண்டீபன் ரங்கநாதன் அவர்களும் மற்றும் அறிமுக நாயகியாக மிதுனா அவர்களும் நடித்துள்ளனர்.
![](http://www.cinemapaarvai.com/wp-content/uploads/2020/03/Oviya-Movie-Stills-008-1024x683.jpg)
கஜன் சண்முகநாதன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுச்டின் பணிகளை கடலூரை சேர்ந்த TS மீடியா ஒர்க்ஸ் செய்து வருகிறது. இந்த படத்தின் ‘நான் பிளாட்டினம் சிலை’ எனும் பாடலை பிரபல எழுத்தாளரான பாவா செல்லத்துரை அவர்கள் கடந்த மாதம் வெளியிட்டார்.
இப்பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.