full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

திரிஷாவிற்குக் கிடைத்த கௌரவம்!

நடிகை திரிஷா திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் பல சமூக சேவைகளையும் அவ்வப்போது செய்து வருபவர்.
செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், அதற்காக நடிகர்களோடு சேர்ந்து தனியாக அறக்கட்டளை
ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் ஏற்கனவே சர்ச்சைக்குறிய “பீட்டா” அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.

இந்நிலையில், இவருக்கு யுனிசெஃப் அமைப்பு ஒரு பொறுப்பைத் தந்து கௌரவப்படுத்தியுள்ளது. அதன்படி கேரளா மற்றும்
தமிழ்நாடு குழந்தைகள் நலனுக்கான நல்லெண்ணத் தூதுவராக திரிஷாவை நியமித்துள்ளார்கள்.

ஊர் ஊராக, தெருத் தெருவாக சுற்றி களத்தில் இறங்கி பல அமைப்புகளும், நபர்களும் குழந்தைகளுக்காக பணி செய்து
கொண்டுள்ள போது, இது போல பொறுப்புகளை நடிகைகளுக்கே தொடர்ந்து வழங்கி வருவது ஏன்? என்றும், எதனடிப்படையில்
அவர்களுக்கு இந்த மாதிரியான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன? என்பது போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தின் மகளும், தனுஷின் மனைவியுமாகிய ஐஸ்வர்யாவிற்கு ஐ.நா சபையில் இந்தியாவின்
பெண்களுக்கான தூதராக பொறுப்பு வழங்கப்பட்ட போதும் சர்ச்சை வெடித்தது. தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பிற்கு ஐஸ்வர்யா
என்ன செயலாற்றியிருக்கிறார் என்று எவருக்குமே தெரியாத நிலையில், திரிஷா தனக்கு வழ்ங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பில்
என்ன பணியாற்றுவார் என்பதும் பலரது கேள்வியாக இருக்கிறது.