full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஔரங்கசீப் கோட்டையில் த்ரிஷா

நடிகை த்ரிஷா, 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்துள்ள சதுரங்கவேட்டை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

மேலும் `மோகினி’, `கர்ஜனை’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ள த்ரிஷா, ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் `1818′ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்திலும், விஜய் சேதுபதியுடன் `96′ படத்திலும் நடித்து வருகிறார்.

இது தவிர தற்போது திருஞானம் இயக்கத்தில் உருவாகும் `பரமபதம் விளையாட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 24 HRS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நந்தா, ரிசார்ட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆற்காடு கோட்டையில் வைத்து நடைபெறுகிறது. இந்த கோட்டையை பலநூறு வருடங்களுக்கு முன்னர் மன்னர் ஔரங்கசீப் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்கட்டப் படப்பிடிப்பு 15 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இடைவெளி ஏதும் இல்லாமல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்துக்கு அம்ரிஷ் இசையமைக்கிறார்.