திரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் உருண்டோடிவிட்டன. தமிழ், தெலுங்கு உட்பட இருக்கிற அத்தனை முன்னணி கதாநாயகர்களுடனும், இளம் கதாநயகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டார். ஆனால், இதுவரையில் ரஜினி ஜோடியாக ஒரு படத்தில் கூட நடிக்கவேயில்லை.
இதனால், அது பெரும் ஏக்கமாகவே மாறிப்போனது. எந்த பேட்டி என்றாலும் திரிஷா இதனை குறிப்பிட்டு பேசுவார். ஒருவழியாக அவரது ஏக்கம் தீரும் நேரம் வந்திருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் திரிஷாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வரத் தொடங்கியின்றன. ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடிக்கும் நிலையில், திரிஷாவும் காதலியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக இருக்கலாம் என்று செய்தி வருகிறது.
திரிஷாவின் நடிப்பில் கடைசியான வெளியான “மோகினி” படம்த்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், “96”, “கர்ஜனை”, “சதுரங்க வேட்டை 2”, “1818”, “பரமபதம் விளையாட்டு” உட்பட அரை டஜன் படங்கள் திரிஷாவின் கைவசம் உள்ளன இப்போது.