தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோயின்கள் காலம் தான். நயன்தாரா, திரிஷா, ஜோதிகா, அமலா பால், வரலட்சுமி சரத்குமார், ஓவியா என அனைவருமே தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இவர்கள் “சோலோ”வாக நடிக்கக் காட்டும் ஆர்வத்தைப் பார்த்து புதுமுக இயக்குநர்கள் மட்டுமல்லாது, முன்னணி இயக்குநர்களும் “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளைத் தயார் செய்வது கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருகிறது.
மாயா, டோரா, அறம் என “ஹீரோயின் சப்ஜெக்ட்” கதைகளுக்கு புள்ளையார் சுழி போட்டவர் நயன்தாரா தான். இப்போது கூட “மா” குறும்பட இயக்குநர்
சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிருக்கிறார்.
அதே போல் தான் ஜோதிகாவும் “36 வயதினிலே” படத்தில் நடித்து பெயர் வாங்கினார். அதன் பிறகு அவர் நடித்த “மகளிர் மட்டும்” திரைப்படமும் எல்லா தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இப்போது கூட வெளிவந்திருக்கும் “நாச்சியார்” படத்தில் கூட ஜோதிகாவே நாயகி.
இடைவெளியில் கொஞ்சம் சுனக்கமாக இருந்த திரிஷாவும், அடுத்தடுத்து கர்ஜனை, மோகினி என சோலோவாக களமிறங்கி விட்டார்.
“அதோ அந்த பறவை போல” படத்தில் அமலா பால், “சக்தி” படத்தில் வரலட்சுமி சரத்குமார், “90 எம்.எல்” படத்தில் ஓவியா என வரிசையாக தனியாய் களமிறங்கி இருக்கிறார்கள்.
கதாநாயகர்கள் மட்டுமே கெத்து காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில், கதாநாயகிகள் தனித்து ஜெயிப்பதும் நல்ல விஷயம் தானே??