தட்டம்மை நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த பிரபல தமிழ் நடிகை த்ரிஷா பிரசார தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கேரள அரசும், யூனிசெப் அமைப்பும் இணைந்து நேற்று ஒரு குறும்படம் ஒன்றை வெளியிட்டது. இதில் நடிகை த்ரிஷா, தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த படத்தில் த்ரிஷாவின் நடிப்பும், பேச்சும் கேரள மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் த்ரிஷாவின் தட்டம்மை விழிப்புணர்வு குறும்படம் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவியது.
இது பற்றி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறும் போது, “இந்த விழிப்புணர்வு படத்தில் த்ரிஷாவுக்கு குரல் கொடுத்திருப்பது பிரபல பாடகி சின்மயி. ஏற்கனவே த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா, என்றென்றும் புன்னகை போன்ற படங்களில் சின்மயிதான் இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்திருந்தார். இதனால் நாங்களும் இக்குறும்படத்திலும் த்ரிஷாவுக்கு டப்பிங் கொடுக்க வைத்தோம். அது மக்களை மிகவும் கவர்ந்து விட்டது. இதன்மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.” என்றனர்