ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘காலா’. இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் ‘காலா’ பட கதை, தலைப்பு தன்னுடையது என உதவி இயக்குநர் ராஜசேகர் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், ‘GSR விண்மீன் கிரியேஷன் மூலம் 21-4-1996 முதல் south indian film chamber of commerce பதிவு அலுவலகத்தில் ‘கரிகாலன்’ என்ற தலைப்பை செய்யப்பட்டது.
‘கரிகாலன்’ தலைப்பு கதையின் மூலகரு, பாடல்கள் ஆகியன நீதி வழுவாத தமிழ் அரசர் கரிகால சோழனின் வாழ்க்கை வரலாற்றை அவர் அக்காலத்திலே நாட்டு மக்களுக்கு செய்த ‘அறசெயல்’, வீரச்செயல்’ போன்றவற்றை மையப்படுத்தி கதாபாத்திரத்தின் கதாநாயகனாக மதிப்பிற்குறிய ரஜினிகாந்த் அவர்களை வைத்து இந்த திரைப்படத்தை வெளியிடுவதே என் லட்சியமாக கொண்டு பல முறை 1995, 1996ல் அன்றைய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணனிடம் ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சென்று கரிகாலன் தலைப்பு கதை பற்றி கூறினேன். மேலும் அவரின் உதவியுடன் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று அவர்களை நேரில் சந்தித்த போது பிறகு பேசலாம் என்று சொல்லி புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டனர்.
கரிகாலன் என்ற தலைப்பு கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடைய உருவாக்கம்.
இந்நிலையில், ரஜினிகாந்த அவர்களை வைத்து நடிகர் தனுஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் இயக்குனர் ரஞ்சித் படத்தை இயக்க போவதாகவும் அந்த படத்தின் பெயர் காலா கரிகாலன் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்து தீராத மன உலைச்சல் அடைந்துள்ளேன். என்னால் உருவாக்கப்பட்ட கரிகாலன் தலைப்பையும் கதையையும் கதையின் மூல கருவினையும் நடிகர், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் திருடி கரிகாலன் என்ற என்னுடைய தலைப்பை காலா கரிகாலன் என்றும் என்று பெயர் வைத்து உருவாக்கி வருகிறார்கள்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அவரின் புகார் மனு கீழே உள்ளது….