full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தினகரனுடன் இணைந்து பணியாற்றத் தயார் – விஷால்!

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், பிரம்மாண்டமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
இந்த வெற்றிக்குப் பிறகு பலரும் தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ”அபார வெற்றி பெற்றிருக்கும் தினகரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஆர்கே நகர் தொகுதியைப் பொறுத்தவரை குடிநீர்,
சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மீனவர்களின் பிரச்னைகளும் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றன. மார்க்கெட்டில் குடிநீர் வசதியோ கழிவறை வசதியோ இல்லாமல் பெண்கள் அவதிப்படுகின்றனர்.

தினகரன் இவற்றை எல்லாம் நிறைவேற்றுவார் என்று ஆர்கே நகர் மக்களுடன் சேர்ந்து நானும் நம்புகிறேன். இந்த மக்கள் பணிகளை நிறைவேற்ற தினகரனுக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்ற தினகரன் ஆர்கே நகர் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு வீட்டிலும் தினமும் அடுப்பு எரிந்து திருப்தியாக பெண்கள் குக்கரில் சமைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று விஷால் கூறியுள்ளார்.