full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இணைய தளத்தில் மோதும் டி.வி. நடிகைகள்

வனிதா சர்ச்சையை தொடர்ந்து இணைய தளத்தில் 2 டி.வி. நடிகைகள் மோதல்

நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை சர்ச்சையாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருடன் அவர் மோதிய சம்பவம் சமீபத்தில்தான் அடங்கியது. இந்த நிலையில் தற்போது இரண்டு டி.வி. நடிகைகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இணைய தளத்தில் பரபரப்பாகி வருகிறது. பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான சித்ராவும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த ரசிகர் ஒருவர் கவர்ச்சி புகைப்படங்களை எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதற்கு பதில் அளித்த சித்ரா அதுபோன்ற படங்களை என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம். அப்படிப்பட்ட படங்கள் வேண்டும் என்றால் 2000-ல் பிறந்த அந்த நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு செல்லுங்கள் என்று பதிவிட்டார். அந்த பதிவுக்கு கீழே ஒரு ரசிகர் நடிகை ஷிவானியைத்தானே சொல்கிறீர்கள் என்று கேட்டார். இது சர்ச்சையானது. ஷிவானியும் சித்ரா மீது கோபமானார். சித்ராவுக்கு பதில் அளிக்கும் வகையில் “என்னை உனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தினமும் என்னை பார்க்கும் நீயும் எனது ரசிகைதான். மற்றவர்கள் பற்றி பேசும் முன் உன் முதுகை பார்” என்று பகிர்ந்து சித்ராவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். கெட்ட வார்த்தையிலும் திட்டினார். இதுபோல் இருவரின் ரசிகர்களும் பதிவுகளை வெளியிட்டு அவர்களின் மோதலை பெரிதாக்கினர்.

இது பரபரப்பாகி உள்ளது.