full screen background image
Search
Tuesday 3 December 2024
  • :
  • :
Latest Update

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சமந்தாவின் “யு-டர்ன்” ஃபர்ஸ்ட் லுக்!!

ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகத்தையும் கன்னட சினிமாவின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பவன் குமார். அவர் இயக்கிய “லூசியா” திரைப்படம், இந்திய அளவில் கொண்டாடப்பட்ட வெகுசில கன்னடப் படங்களில் ஒன்றாக மாறியது. அறிமுகமான முதல் படமே நன்மதிப்பை உண்டாக்க, இரண்டாவது படமாகிய “யு-டர்ன்” திரைப்படமும் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் தான் “விக்ரம் வேதா” பட நாயகி ஸ்ரத்தா ஸ்ரீநாத் அறிமமானார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் “யு-டர்ன்” திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு மொழிகளும் பவன் குமாரே இயக்கி இருக்கிறார். இதன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார் பவன் குமார். இப்படத்தில் சமந்தா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ஆதி, நரேன், ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா மற்றும் பிரபல நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. “யு-டர்ன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்த படம் எதைப்பற்றியது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

இது குறிது கருத்து கூறிய இயக்குநர் பவன் குமார்,

“ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீது தீவிர ஈடுபாட்டை காட்டிய சமந்தா எல்லா புகழும் சேரும். படத்தின் ஒரிஜினல் பதிப்பு ரிலீஸ் ஆகும் முன்பே அவர் இந்த படத்தின் மீது பிணைப்போடு இருந்தார். மேலும் படத்தை தானாகவே முன்வந்து விளம்பரப்படுத்தினார். பொருத்தமான நடிகர்கள் படத்துக்குள வரும்போது ஒரு இயக்குனரின் படைப்பு முழுமையடைகிறது. குறிப்பாக, அதை ரீமேக் செய்யும்போது, பொருத்தமானவற்றை கண்டறியும் பொறுப்பு மிகப்பெரிய சுமை. ஆனால், சமந்தா அதை எளிதாக்கினார். அந்த கதாபாத்திரத்திற்கு வேண்டிய விஷயங்களை சிறப்பாக செய்வார் என நம்புகிறேன். நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவிலான ரசிகர்களைக் கொண்டிருப்பதால், என்னுடைய வேலைக்கு மிகப்பெரிய மைலேஜ் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.

நடிகை சமந்தா இயக்குனர் பவன் குமார் பற்றி கூறும்போது,

“இந்த படத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அது தான் என்னைத் தேர்ந்தெடுத்தது. இது போன்ற வாய்ப்புகளை பெறுவது ஒரு ஆசீர்வாதம், அதை தவறவிட்டால், அது வாழ்நாள் முழுக்க குற்ற உணர்வாக இருக்கும். நான் அவரது ஒரிஜினல் ‘யு-டர்ன்’ படத்தை பார்த்தபோது, என்னால் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. ‘யு-டர்ன்’ படம் வேகம், மர்மம் மற்றும் வலுவான ஒரு பிரச்சினை கலந்த ஒரு கலவை. இது நாம் காணும் ஒரு அன்றாட பிரச்சனையாகும், அது தான் இந்த படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இதில் ஒரு பொதுவான விஷயம், ஒரிஜனல் பதிப்பின் வெற்றியும், அதன் ரீமேக் பதிப்புகளின் வெற்றியும் ஒரே மாதிரியாக இருக்காது. அது தான் பிராந்திய மொழி ரீமேக் படங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறிவிடுகிறது. ஆனால் பவன், முன் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தினார். மேலும் நடிகர்கள் தேர்வும் மிக முக்கியமானது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும்” என்றார்.