full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தளபதி 63 படக்குழுவினரின் திடீர் முடிவு

 
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு சென்னையில் தீவிரமாக நடைபெற்று வந்தது. அஜித் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவது இல்லை. அந்த பாணியில் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என்று முதலில் கூறினார்கள்.
 
ஆனால் சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் மட்டும்தான் இங்கு உள்ள தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக் கொண்டதால், இங்கேயே படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. காசிமேடு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடந்த போது, விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் பெருமளவு கூடிவிட்டார்கள். இதனால், காவல் துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ச்சியாக ரசிகர்கள் தொந்தரவு இருந்து வருவதால், தினமும் திட்டமிட்ட காட்சிகளை அதற்கான கால அளவுக்குள் படமாக்க முடியவில்லை. இதனால், ‘தளபதி 63’ படக்குழு இனிமேல் அரங்குகளுக்குள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிவு எடுத்துள்ளது. தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்பவுள்ளார்.
 
 
அதனைத் தொடர்ந்து ‘தளபதி 63’ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இது முழுமையாக அரங்குகளில் மட்டுமே நடைபெற உள்ளது. இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.